முகப்பு
புதுக்கோட்டை

காரைக்குடி வரை பல்லவன் விரைவு ரயில் நீட்டிப்பு:புதுகை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னையிலிருந்து திருச்சி வரை இயக்கப்பட்டு வந்த பகல் நேர பல்லவன் விரைவு ரயில் செப்.1 -ம் தேதி முதல் காரைக்குடியிலிருந்து இயக்கப்படும் என்ற அறிவிப்பைததொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் புதுக்கோட்டை  ரயில் நிலையத்துக்கு வந்த பல்லவன் ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம், வழக்குரைஞர்கள்

Updated On : 2 செப்டம்பர் 2013, 1:49 am IST
பகிர்:

சென்னையிலிருந்து திருச்சி வரை இயக்கப்பட்டு வந்த பகல் நேர பல்லவன் விரைவு ரயில் செப்.1 -ம் தேதி முதல் காரைக்குடியிலிருந்து இயக்கப்படும் என்ற அறிவிப்பைததொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் புதுக்கோட்டை  ரயில் நிலையத்துக்கு வந்த பல்லவன் ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மக்கள் காரைக்குடியில் இருந்து சென்னை, கோவை , விழுப்புரம், பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு  பகல் நேர விரைவு ரயில்  இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ரயில் பயணிகள் சங்கம், வர்த்தகர் கழகம், நகர் நல இயக்கம், மாவட்ட நுகர்வோர் குழு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல ஆண்டுகளாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

மேலும், மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.  அதன் விளைவாக,  முதல் கட்டமாக  செப்.1 - ம் தேதி முதல் பல்லவன் விரைவு ரயிலை காரைக்குடி-சென்னை இடையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.  இதனால், தங்களது நெடு நாள் கோரிக்கை நிறைவேறியதால் சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement

Advertisement

இதைத்தொடர்ந்து, புதுக்கோட்ட ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ஏ. சந்திரசேகரன், ஆர். சிவகுமார், ஏ. இப்ராகிம்பாபு, வழக்குரைஞர் ஆர். முருகேசன், வர்த்தர்கழக தலைவர் சீனுசின்னப்பா, மாவட்ட காங்கிரஸ் தலைவர் தி. புஷ்பராஜ், நகர் நல இயக்க நிர்வாகி ஆர். சம்பத்குமார், நட்புறவு இயக்க நிர்வாகிகள் ஆர். முத்துச்சாமி, ரவிச்சந்திரன், விவசாயிகள் சங்க நிர்வாகி ஜி.எஸ். தனபதி, டாக்டர் கே.எச். சலீம் உள்ளிட்டோர் பங்கேற்று பயணிகளுக்கு இனிப்பு வழங்கி  மகிழ்ந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments