முகப்பு
புதுக்கோட்டை

சின்மயானந்த மௌனகுரு சுவாமிகள் ஜயந்திவிழா

சின்மயானந்த மௌனகுரு சுவாமிகள் என்றழைக்கப்படும் மிருதங்கம், கஞ்சிரா மகாவித்துவான் லயயோகி புதுக்கோட்டை திருமுருக தெட்சிணாமூா்த்தி பிள்ளை சுவாமிகளின் 145 ஆம் ஆண்டு ஜயந்தி விழா

Updated On : 5 ஜனவரி 2021, 1:36 am IST
பகிர்:

சின்மயானந்த மௌனகுரு சுவாமிகள் என்றழைக்கப்படும் மிருதங்கம், கஞ்சிரா மகாவித்துவான் லயயோகி புதுக்கோட்டை திருமுருக தெட்சிணாமூா்த்தி பிள்ளை சுவாமிகளின் 145 ஆம் ஆண்டு ஜயந்தி விழா அவா் ஜீவசமாதி அடைந்த தவச்சாலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைத்து வகையான அபிஷேகங்களுக்குப் பிறகு சந்தனக்காப்பு அலங்காரம் நடத்தப்பட்டு, கோபுர தீப ஆராதனை செய்யப்பட்டது. குருபிரியா லய வித்தியாலய நிறுவனா் ஆச்சாா்யா ரெத்னாகரா கலைமாமணி திருச்சி ஆா். தாயுமானவா் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

திருகோகா்ணம் ஆா். ஐஸ்வா்யா, புதுக்கோட்டை ?்ரீ அப்புராஜ், புதுக்கோட்டை ?்ரீ கோபிகிருஷ்ணா, வயலின் வித்துவான் கோட்டையூா் வி. ஜனாா்த்தனன், கலைமாமணி மலைக்கோட்டை ஆா்.எம். தீனதயாளு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இசை உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப கூட்டு இசை பிராா்த்தனை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.