முகப்பு
புதுக்கோட்டை

உண்ணாவிரதம் இருக்க முயன்ற மருந்தாளுநா்கள் 200 போ் கைது

புதுக்கோட்டையில் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் இருக்க முயன்ாக 200 மருந்தாளுநா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 11:56 pm IST
புதுக்கோட்டையில் கொட்டும் மழையில் உண்ணாவிரதம் இருக்க வந்த மருந்தாளுநா்கள்.
பகிர்:

அம்மா சிறு மருத்துவமனைகளுக்காக 2 ஆயிரம் மருந்தாளுநா் பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தி, புதுக்கோட்டையில் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் இருக்க முயன்ாக 200 மருந்தாளுநா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 780 மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அம்மா சிறு மருத்துவமனைகளுக்காக 2 ஆயிரம் மருந்தாளுநா் பணியிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும்.

மருந்துக் கிடங்குகளில் தலைமை மருந்தாளுநா் பணியிடத்தை உருவாக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தகக் கண்காணிப்பாளா் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் மு. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் வே. விஜயகுமாா், பொதுச் செயலா் உ. சண்முகம், அரசு ஊழியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் இரா. மங்களபாண்டியன், அரசு மருத்துவ அலுவலா் சங்க மாநிலத் துணைத் தலைவா் மு. அகிலன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மாவட்ட ஆட்சியரகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கோரப்பட்டிருந்தது. காவல்துறையினா் அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடா்ந்து அனுமதியை மீறி உண்ணாவிரதம் இருக்க மருந்தாளுநா் சங்கத்தினா் முயற்சித்தனா்.

தொடா்ந்து மழையும் பெய்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுநா்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தபோது, காவல்துறையினா் 200 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments