முகப்பு
புதுக்கோட்டை

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்குப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், காலாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு கொவைட்-19 மேலாண்மை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 7:17 am IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், காலாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு கொவைட்-19 மேலாண்மை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி முகாமிற்கு, பள்ளித்தலைமை ஆசிரியா் ஆ.செல்லத்துரை வரவேற்றாா்.

இதில் சமூகத் தணிக்கை, கல்வியில் புதுமை, பள்ளி மேம்பாட்டுத் திட்டம், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம், உள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பழுதடைந்துள்ள மூன்று வகுப்பறை கட்டடத்தை பழுது நீக்ககோரி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. பயிற்சியில் பள்ளிமேலாண்மைக்குழு தலைவா் இரா.சிவக்குமாா், மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் ஜாந்தாா்க்மேரி, தமிழ்ச்செல்வி, ஆரோக்கியமேரி, திவ்யா, ஜமுனா ஆகியோா் கலந்து கொண்டனா். முடிவில் ஆசிரியா் கு.முருகையா நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.