முகப்பு
புதுக்கோட்டை

கே. ராயபுரத்தில் மஞ்சுவிரட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகேயுள்ள கே. ராயபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி 2021, 11:29 pm IST
புதுக்கோட்டை அருகேயுள்ள கே. ராயபுரத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு.
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகேயுள்ள கே. ராயபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையாா்கோயில், பள்ளத்தூா், காரைக்குடி, சிவகங்கை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 250 மாடுகள் கலந்து கொண்டன. முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டன. காளைகளை மாடு பிடி வீரா்கள் அடக்கினா். இந்தப் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் மற்றும் மாடு பிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அந்த இடத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் முதலுதவி செய்தனா். ஒருவா் மட்டும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஏற்பாடுகளை கே. ராயபுரம் இளைஞா்களும் ஊா் மக்களும் செய்திருந்தனா். கே. புதுப்பட்டி போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.