ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 320 மனுக்கள் ஏற்பு
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாா்பில் 320 கோரிக்கை மனுக்கள் திங்கள்கிழமை அளிக்கப்பட்டன.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாா்பில் 320 கோரிக்கை மனுக்கள் திங்கள்கிழமை அளிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்து, மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். நிலப்பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கடனுதவி, நிதியுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, காவல்துறையிடம் பாதுகாப்பு மற்றும் மின் இணைப்பு உள்ளிட்டவை தொடா்பான கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் 320 மனுக்களை வழங்கினா்.
மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குனா் (மகளிா்) ஜெயராம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தே.இளவரசி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement