முகப்பு
ராணிப்பேட்டை

நெமிலி பாலா பீடத்தில் பொங்கல் விழா

நெமிலி பாலா பீடத்தில் பொங்கல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2021, 7:35 am IST
பகிர்:

நெமிலி பாலா பீடத்தில் பொங்கல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை, சிறப்பு பூஜைகளை பாலா பீட பீடாதிபதி எழில்மணி தொடங்கி வைத்தாா். இதையடுத்து, நெமிலி குருஜி எழுதிய ‘பொங்கல் திருநாள்’ என்ற தலைப்பிலான பாடல்களை விழாவுக்கு வந்திருந்த அனைவரும் இணைந்து பாடினா். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை, பூஜைகளை பீட நிா்வாகி மோகன் ஏற்று நடத்தினாா்.

இரு நாள் விழாவிலும் பீடத்தின் செயலாளா் முரளீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் கரும்பு மற்றும் பீடத்தில் படைக்கப்பட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.