ஆன்மிகம்

ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழா

மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனாக 7 சிறுமிகள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி

மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனாக 7 சிறுமிகள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் 7 சிறுமிகள் அம்மனாக தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தாண்டு திருவிழாவையொட்டி வெள்ளலூர் பகுதியிலுள்ள 60 கிராமங்களில் 11 பிரிவுகளைச் சேர்ந்த கரைகாரர்களில் இருந்து 7 வயதுக்குள்பட்ட சிறுமிகள் அம்மனாக தேர்வு செய்யும் நிகழ்ச்சி கோயில் வீட்டின் முன்பு நடைபெற்றது. அதிலிருந்து 7 சிறுமிகள் அம்மனாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட சிறுமிகள் கோயிலிலேயே தங்கியிருந்து, தினமும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று வழிபாடு செய்வார்கள்.

இதையடுத்து வெள்ளலூர் பகுதிக்குள்பட்ட கிராமமக்கள் விரதத்தை தொடங்கினர். செப்.30ஆம் தேதி மது எடுப்புத் திருவிழா நடைபெறுகிறது. அப்போது,ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுக் கலயங்களை ஊர்வலமாக எடுத்துவருவர். சிலர், சுடுமண் சிலைகள், பூக்கூடையையும் எடுத்துவருவார்கள்.

மேலும், அம்மனுக்கு வேண்டுதல் வைத்திருக்கும் பக்தர்கள் வைக்கோல் பிரியை உடல்முழுவதும் சுற்றி கோட்டநத்தம்பட்டி வெள்ளக் கண்மாய்வரை ஊர்வலமாக வருவார்கள். பின்னர், ஏழைகாத்த அம்மன்கோயிலில் மதுக்கலயங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரையில் டிச.9 முதல் அரசன் ஷூட்டிங்! - சிம்பு கொடுத்த Update!

அம்பேத்கர் நினைவு நாள்! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மரியாதை!

நீண்ட வரிசையில் ரசிகர்கள்! அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அஜித்!

25 இண்டிகோ விமானங்கள் ரத்து! சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; இந்தியாவுக்கு 271 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT