முகப்பு
ஆன்மிகம்

போரூர் சிவ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீராமநவமி விழா

கிண்டியிலிருந்து பூவிந்தமல்லி செல்லும் சாலையில் போரூர் சிக்னல் அருகே உள்ளது ஸ்ரீ மாருதி நகர் இங்குள்ள

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:01 AM
பகிர்:

கிண்டியிலிருந்து பூவிந்தமல்லி செல்லும் சாலையில் போரூர் சிக்னல் அருகே உள்ளது ஸ்ரீ மாருதி நகர் இங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் தெருவில் உள்ளது ஸ்ரீ சிவ வீர ஆஞ்சநேயர் ஆலயம். இங்கு ஸ்ரீராமபக்தனாகிய ஆஞ்சநேய சுவாமி வடக்கு பார்த்த முகத்துடன் ருத்ராட்சமாலை அணிந்து கொண்டு அற்புதமான கோலத்தில் சந்நதி கொண்டுள்ளார். திருமணத்தடைகள் நீங்கவும், மழலை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் இப்பெருமானை தரிசனம் செய்ய வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

இவ்வாலயத்தில் ஸ்ரீராமநவமி விழா மார்ச் 25 தொடங்கி 30 வரை சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தை திறம்பட நிர்வகித்து வரும் ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் செய்துள்ளது.

நிகழ்ச்சி விவரங்கள்:

மார்ச் 25 முதல் 28 வரை - லட்சார்ச்சனை

மார்ச் 28 காலை 9 மணி - ஸ்ரீராம ஹோமம், மாலை 5.30 மணி - ஸ்ரீசீதாராம திருக்கல்யாணம்

மார்ச் 29 மாலை 6 மணி ஸ்ரீ சீதாதேவி ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு ஊஞ்சல் உற்சவ சேவை

மார்ச் 30 மாலை 5.30 மணி - ஸ்ரீராம ரத ஊர்வலம்

மேலும் மார்ச் 26, 27 தேதிகளில் இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. மேலும் தகவல்களுக்கு 044-24765678, 9884574630

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.