ஆன்மிகம்

சனீஸ்வரர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களை வீட்டுக்குக் கொண்டு செல்லலாமா? 

தினமணி

புரட்டாசி மாதம், சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில், தகப்பனார் சூரிய பகவானுக்கும், தாயார் சாயா தேவிக்கும் பூர்வ புண்ணிய பொங்கு சோபன புத்திரன் சனிபகவான் ஜனனமானார். இவர் நவக்கிரகங்களிலே மிகவும் பிரசித்தி பெற்றவர். நவக்கிரக பரிபாலனத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் பல்வேறு விதமான ஆதிக்கம், பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானுக்கு ஆயுள்காரகன், கர்மகாரகன் என்ற மிக முக்கியமான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தீர்க்காயுள், பூரண ஆரோக்கியம், சகல சௌபாக்கியங்களுடன், நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பது எல்லோரும் விரும்புவதுதான். இந்த மூன்றையும் அருள்பவர் சனிபகவான். இவர் நியாயவான், தர்மவான் நீதிமான் எனப் போற்றப்படுகிறார். மற்ற கிரகங்கள் என்னதான் யோக நிலையில் இருந்தாலும் சனிபகவானின் சம்மதம் இல்லாவிட்டால் யோகத்தைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போகும். 

இவர் 12 ராசிகளைச் சுற்றிவர சுமார் 30 ஆண்டுக் காலம் ஆகிறது. இந்த 30 ஆண்டுகளில் பல்வேறு அனுபவங்களை ஒரு ஜாதகருக்கு ஏற்படுத்துகிறார். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4-ம் தேதி (19.12.17) செவ்வாய்க்கிழமை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு சஞ்சாரம் செய்தார்.

சனிபகவான் பெயர்ச்சியானதையடுத்து, நேற்று லட்சக்கணக்கானோர் கோயிலுக்குச் சென்று சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அப்போது, எல்லோருக்கும் எழுந்த ஓர் சந்தேகம் என்னவென்றால், சனீஸ்வரர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களை வீட்டுக்குக் கொண்டு செல்லலாமா? இல்லை அங்கேயே விட்டுவிட்டு வர வேண்டுமா? என்பது தான்.

பொதுவாக சனீஸ்வரர் கோயிலில் வழங்கப்படும் தேங்காய், பழம், விபூதி பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் கோவிலிலேயே வைத்து விட்டு வந்துவிட வேண்டும் என்ற கருத்து உள்ளது.

கோவிலில் வழங்கப்படும் விபூதி, குங்குமம், தீர்த்தம், தேங்காய், பழம், லட்டு, முறுக்கு, வடை, பஞ்சாமிர்தம், புஷ்பம் போன்ற பிரசாதங்களைத் தாராளமாக வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். இதில், எந்தவித சந்தேகமும் இல்லை. அப்படி எடுத்துச்செல்வதினால், எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT