ஆன்மிகம்

விநாயகர் பிரதிஷ்டை செய்த கச்சி அனேகதங்காவதேஸ்வரர்

தினமணி

அனேகதம் - யானை முகத்துடைய விநாயகர் இறைவனை வழிபட்ட தலம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காஞ்சியின் 5 பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. குபேரன் வழிபட்ட தலம். சுந்தரர் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 4-வது ஸ்தலம். 274 சிவாலயங்களில் இது 237-வது தேவாரஸ்தலம் ஆகும். இத்தலம் 1000 - 2000 வருடங்களுக்கும் பழமையானது.

அனேகதங்காபதம் என்ற பெயரில் இமயமலைச் சாரலில் ஒரு தலமிருப்பதால் அதனின்றும் வேறுபாடு அறிய இத்தலத்தை கச்சி அனேகதங்காவதம் என்றழைக்கப்படுகிறது.

இறைவன் - கச்சி அனேகதங்காவதேஸ்வரர்
இறைவி - காமாட்சி
தீர்த்தம் - தாணு தீர்த்தம்

மகரிஷியின் மகள் வல்லபை சிவபக்தியை. அவளை இரண்ய அசுரன் கேசி பிடித்து சென்றான். அவள் தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். அம்பிகை சிவனிடம், விநாயகனை அனுப்பி அசுரர்களை அழித்து வெற்றி பெற அருளவேண்டும் என்றாள்.

விநாயகப் பெருமான், இரணியபுரம் நகரத்திலுள்ள அசுரர்களை அழிப்பதற்கு புறப்படும் முன் தம் பெயரில் அனேகபேஸ்வரர்  என்று சிவலிங்கம் ஸ்தாபனம் செய்து வழிபட்டுப் புறப்பட்டுச் சென்றார். விநாயகர் பிரதிஷ்டை செய்த அம்மூர்த்தியே இன்று அனேகதங்காவதேஸ்வரர் என்று திருநாமம் கொண்டு விளங்குகிறார்.

"தேனெய் புரிந்துழல்" என்று தொடங்கும் பதிகத்தை சுந்தரர் பாடியுள்ளார். இத்தலப்பதிகம் அழகான கும்மிமெட்டில் அமைந்துள்ளது. பாடி அனுபவிக்கும்போது அச்சுவை வெளிப்படுகின்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, புத்தேரித் தெரு வழியாகக் கயிலாயநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் சென்று இக்கோயிலை அடையலாம்.

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT