ஆன்மிகம்

இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது? வாங்க பார்க்கலாம்!

தினமணி

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (நவம்பர் 29 - டிசம்பர் 5) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் வேலைகளைத் தெளிவுடன் செய்வீர்கள். உடன்பிறந்தோர் வழியில் சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். வீண் வாக்குவாதம் செய்வோரிடமிருந்து தள்ளி இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்காது. உதவியாக மேலதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.  வியாபாரிகள் கடுமையாக உழைப்பார்கள். இறுதியில் வெற்றி உண்டு. விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவார்கள். கால்நடை பராமரிப்புச் செலவுகள் கூடும்.  

அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.  கட்சி மேலிடத்தின் ஆதரவு குறைந்திருக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதி காண்பார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். உற்றார் உறவினர்களிடம் அனுசரணையுடன் பழகுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆசிரியர் சொல்படி கேட்டு நடக்கவும். 

பரிகாரம்: விநாயகரையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 30. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடாகும். முதலீடுகள் கணிசமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பேச்சுத் திறமையால் நன்மைகள் உண்டாகும். புதிய ரகசியங்களை அறிவீர்கள். அக்கம்பக்கத்தினரால் சிறு குழப்பங்கள் உருவாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சற்று இழுப்பறியாகத்தான் ஊதிய உயர்வு உண்டாகும். சில இடையூறுகளுக்கு இடையிலேயே பணிகள் திட்டமிட்டு முடிப்பீர்கள். வியாபாரிகள் கிடைக்கின்ற லாபத்தையே சரியாகப் பயன்படுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். 

விவசாயிகளுக்கு மகசூல் லாபகரமானதாக இராது. புதிய குத்தகைகளைத் தவிர்க்கவும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெருக்கிக் கொள்ள அரவணைத்து அன்பு வழியில் செல்லுங்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். சிறு முயற்சிகளுக்குப்பிறகு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்மணிகள் பெரிய அளவில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம். கணவரின் உடல்நலத்தைக் காக்கவும். மாணவமணிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள பாடுபடுவார்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் கோ பூஜைகளில் பங்கேற்கவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 2. 

சந்திராஷ்டமம்: 29, 30.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன் துறைகளில் சிறிது ஈடுபட்டு லாபமடைவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். பயணங்களால் ஆதாயம் சிறிது ஏற்படும். அண்டை அயலாருடன் மாற்றுக்கருத்து உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமாராக இருக்கும். புதியதாய் செலவுகள் செய்து தொழிலை விரிவு செய்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்கி மகிழ்வீர்கள். பாசனத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும். 

அரசியல்வாதிகள் முயற்சிகள் வெற்றி பெறும். போராட்டங்களைத் தவிர்க்கவும். நிறைய போட்டிகளையும்  சந்திப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று மகிழ்ச்சியுடன் செயலாற்றுவீர்கள். பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் பொருள்களை வாங்கி மகிழ்வர். பேச்சில் கவனம் தேவை. 

மாணவமணிகள் கல்வியில் ஆர்வம் செலுத்தினால்தான் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.  சக மாணவர்களுடன் தேவையில்லாமல் நேரத்தை வீணாக்காதீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்து வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 3. 

சந்திராஷ்டமம்: 1, 2.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வேலைப்பளுவினால் தொந்தரவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. பொருளாதார நிலைமை சீர்படும். புத்திசாதுர்யத்துடன்  அனைத்து நிலைமைகளையும் சமாளிப்பீர்கள். தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளுவது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நட்புடன் பழகுவீர்கள். எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருமானம் கிடைக்கும். கூட்டாளிகளின் விமர்சனங்களுக்கு உள்ளாவீர்கள். விவசாயிகளுக்கு கொள் முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளுக்கும்  சிறிது செலவு செய்ய வேண்டி வரும். 

அரசியல்வாதிகள் பலருடைய பாராட்டைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்ய சில தடைகள் உண்டாகலாம். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக இருப்பார்கள். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். 

மாணவமணிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். 

பரிகாரம்: ஞாயிறன்று சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 2. 

சந்திராஷ்டமம்: 3, 4 , 5.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பணப்புழக்கம் அதிகமாகும். சுபச்செலவுகளும் கூடும். உடல் ஆரோக்கியம் பலப்படும். மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். உறவினர்கள் உதவி செய்ய முன்வருவார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் துரிதமாக முடியும். சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் வரும். பணவரவிற்குக் குறைவு ஏற்படாது. வியாபாரிகளுக்கு வரவு செலவு விஷயங்களில் மெத்தனம் கூடாது. விவசாயிகள் கால்நடைகளைக் கவனத்துடன் பராமரிக்கவும். விவசாயத்தில் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும். 

அரசியல்வாதிகள் செய்ய எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். முக்கியப் பொறுப்புகள் கைகூடும். மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினருக்கு அங்கீகாரமும் புகழும் கிடைக்கப் பெறும். ரசிகர்களை அரவணைத்துச் செல்லவும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். 

மாணவமணிகள் கடுமையாக முயற்சி செய்து கல்வியில் முன்னேறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவுடன் நெடுநாளைய கோரிக்கைகள் நிறைவேறும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 3. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

விரயங்களுக்கு வாய்ப்பு உள்ளதால் சற்று கவனத்துடன் இருக்கவும். பயணங்களைத் தள்ளிப் போடவும். பொருளாதாரத்தில் குறை இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களின் அலட்சியப்போக்கைப் பெரிதுப் படுத்த வேண்டாம். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் சில சலுகைகளைப் பெறுவார்கள். திட்டமிட்ட வேலைகளை மிகுந்த கவனத்துடன் செய்து முடிப்பார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். கூட்டாளிகள் உங்களிடமிருந்து சற்று விலகியே இருப்பார்கள். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கைமேல் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திலிருந்து சில நன்மைகளை அடைவார்கள். சுமுகமான  உறவை வளர்த்துக்கொள்ளவும். தோழர்களைஅரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு பணவரவு நன்றாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பெண்மணிகள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவர். 

பேசும்போது நிதானம் அவசியம். மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 3.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகரிக்கும். திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். அவற்றை மன உறுதியுடன் தகர்த்தெறிவீர்கள். சேமிப்பு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். சக ஊழியர்கள் உறுதுணையாக நிற்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. வியாபாரிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. கூட்டு வியாபாரம் உசிதமல்ல. அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகள் இந்த காலகட்டத்தில் கவனத்துடன் செயல்பட்டால் சங்கடங்கள் ஏதும் வராது. 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளை டென்ஷன் இல்லாமல் முடித்து விடுவீர்கள். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வர்.  புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். 

பெண்மணிகளுக்கு புத்திர வழியில் பூரிப்பும் சந்தோஷமும் உண்டாகும். வீட்டுக்குப் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டுவார்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று சிறுவாபுரி முருகனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்களின் மதிப்பு உயரும். எடுத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். மனதிலிருந்த குழப்பங்கள் விலகி, தெளிவுகள் தென்படும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவுக்கு குறைவு வராது. வேலையில் சுமை அதிகரித்தாலும் அவற்றை சக ஊழியர்களின் அரவணைப்போடு பணிகளை செய்து முடிப்பீர்கள். 

வியாபாரிகளுக்கு முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தேடித் தரும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் பலன்களைப் பெறலாம்.  

அரசியல்வாதிகள் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியானவர்களை கலந்தாலோசிக்கவும். தொண்டர்களை அரவணைப்பீர்கள். கலைத்துறையினருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். அனுகூலமான திருப்பங்களும் தன வரவும் உண்டாகும்.

பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கணவருடனான ஒற்றுமையை பலப்படுத்தவும். மாணவமணிகள் விரும்பிய பாடப்பிரிவில் சேர, கடுமையாக முயற்சிக்க வேண்டி வரும்.

பரிகாரம்: அம்பாளை தாமரை மலர் கொண்டு அர்ச்சிப்பதுடன் பைரவரை தரிசிப்பது நல்லது. 

அனுகூலமான தினங்கள்: 2, 4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் உயர்வு இருந்தாலும் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் இருக்கும். அலைச்சலும் உழைப்பும் அதிகமாகும். குறித்த நேரத்தில் உணவு சாப்பிடாமல் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். மருத்துவ ஆலோசனை நல்லது.

உத்தியோகஸ்தர்கள் மிகுந்த சிரத்தையுடன் நேரம் பாராமல் பணிகளைச் செய்வார்கள். உத்தியோக விஷயமாக நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கடும் போட்டிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தைத் திறம்பட நடத்தி வெற்றிவாகை சூடுங்கள். விவசாயிகள் புதிய குத்தகைகள் கிடைத்து மனம் திருப்தி அடைவீர்கள்.  

அரசியல்வாதிகள் பதவிகளைத் தேடிப் போகாமலேயே தானாகவே கனிந்து வரும். தொண்டர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும். 

பெண்மணிகள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெற பாடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் வெளிவிளையாட்டுகளைக் குறைத்துக் கொண்டு பாடங்களைச் சக மாணாக்கர்களுடன் கலந்தாலோசித்து படிக்கவும்.

பரிகாரம்: சனியன்று சனிபகவானை தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

அலுகூலமான பயணங்கள் ஏற்படும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். சில தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து பெருமையடைவீர்கள். உறவினர்களிடம் எதிர்பாராத ஆதரவைப் பெறுவீர்கள். குறித்த காலத்திற்குள் வேலைகளை முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் சற்று குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவரும் திட்டங்கள் தீட்டி வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். விவசாயிகள் கடுமையாக உழைத்து ஊடுபயிர்களையும் விளைவித்து பணவரவை பெருக்குவீர்கள். 

அரசியல்வாதிகள் பலவழிகளில் வருமானம் பெருகும். கட்சியில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொண்டர்கள் அன்போடு பணிகளைச் செய்வனே செய்வீர்கள். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் சற்று குறையும். எதிர்பார்த்த பிரிவில் சேர சற்று கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வழிபாடு செய்வது அவசியம். 

அனுகூலமான தினங்கள்: 4, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சிரமங்கள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பாசமும் அன்பும் அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். தொழிலில் இருந்த வந்த முட்டுக்கட்டைகள் விலகும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிரிகளின் பலம் குறைந்தே காணப்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும். மேலதிகாரிகளின் கெடுபிடி குறைந்து அனைவரது பாராட்டுகளையும் பெறுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்தும் வியாபாரத்தைப் பெருக்கலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகவே இருக்கும். சலிப்பில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் காரியங்கள் தடையுடன் வெற்றி பெறும். திடீர் பயணம் செல்ல நேரிடும். பிறரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். 

கலைத்துறையினர் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவீர்கள். வருமானம் கிடுகிடுவென உயரும். பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மாணவமணிகள் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண்களும் பெறுவீர்கள்.

பரிகாரம்:  வியாழக்கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

எடுத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றியுடன் முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். உறவினர்கள் தேவைக்கேற்ப உதவுவார்கள். சிலர் வீடு மாற்றம் செய்ய நேரலாம். உடன்பிறந்தோர் உறவில் சற்று விரிசல்கள் ஏற்படலாம். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வேலைப்பளு குறையும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் புதிய வழிகளில் 
வியாபாரத்தைப் பெருக்க நினைப்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகளுக்கு திட்டமிட்ட காரியங்களில் தடையுடன் வெற்றி கிடைக்கும். 

அரசியல்வாதிகள் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். சமூகத்தில்  மதிப்பையும் மரியாதையையும் அதிகரித்துக் கொள்வார்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும். 

பெண்மணிகள் குடம்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். தீவிர ஆலோசனைகளுக்குப்பிறகே செயல்களில் இறங்கவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். பெற்றோர், ஆசிரியர் சொற்படி  நடக்கவும். 

பரிகாரம்: பார்வதி தேவியை தினமும் தரிசிப்பதும் காகத்திற்கு அன்னமிடலும் நல்லது. 

அனுகூலமான தினங்கள்: 2, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT