சனி பகவான் 
கட்டுரைகள்

சனியுடன் மற்ற கிரகங்களின் இணைவும், பலன்களும்..!

சனிபகவானுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் ஏற்படும் பலாபலன்கள்..

இணையதளச் செய்திப் பிரிவு

- ஏ.கே ஆறுமுகம்

சனிபகவான் ஒரு அலிக்கிரகமாகும். மிகவும் வைராக்கியம் உடையவர். ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவானின் ஆதிக்கம் பெற்றிருந்தால் ஜாதகர்கருக்கு வீண்பழி, அவமானம் அடையப்பெறல், அநியாயம், வறுமை, உடலில் காயங்கள் நீசமணிதர்களின் தொடர்பு, அடிமைப்படல், சூது, பயம், துக்கம் ஆகியவற்றை அளிக்கவல்லார்.

குடும்ப வாழ்க்கையில் நிலையான தன்மை, நல்ல வசதியான வாழ்க்கை, சிறைவாசம் செல்லுதல், நல்ல ஆயுள்பலம், கந்தைத் துணிமணி அணிதல், மேற்குத்திசை சிறப்பு, வாத நோயினால் அவதிப்படல், எள்/எண்ணெயில் அதிக நாட்டம், விருப்பமற்ற போக்கில் செல்லுகின்ற மனம் ஆகியவை அளிக்கவல்லார்.

1. சனிபகவானுடன் சூரியன், (பகைக்கிரகம்) இணையப்பெற்றால் ஜாதகருக்கு பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகுதல் கருத்து வேறுபாடு ஏற்படல், பிரிந்து வாழுகின்ற சூழ்நிலை உருவாகுதல், தங்களது குடும்ப வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றமடைதல், உற்சாகமாக செயல்படுதல், கடுமையாக உழைத்துச் செல்வச் செழிப்பு, மற்றும் செல்வாக்கு பெறல் ஆகியவற்றை அடையப்பெறுவர்.

2. சனிபகவானுடன், சந்திரன் (பகைக்கிரகம்) இணையப்பெற்றால் ஜாதகருக்கு தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் சிறப்பு, நல்ல லாபம் அடைதல், பொன், பொருள், அசையா சொத்துக்கள் சேர்க்கை, செல்வாக்கு அதனைப் பயன்படுத்தி பலவிதமான காரியங்களில் வெற்றி வாகை சூடுதல், தங்களது வாழ்க்கையில் இறுதிவரை மனநிம்மதியை இழத்தல் ஆகியவை அடையப்பெறுவர்.

3. சனிபகவானுடன் செவ்வாய் (பகைக்கிரகம்) இணையப்பெற்றால் ஜாதகருக்கு அடிக்கடி விபத்தினால் மரண கண்டம் ஏற்படல், வீண்பழி நேருதல், குற்றவாளியாக அடைகின்ற நிலை, வழக்குகள், வியாஜ்ஜியங்கள், தங்களது வாழ்க்கையில் பலவித எதிர்பாராத கஷ்டங்கள், தொல்லைகள் ஏற்படல், கடுமையாக உழைக்கும் இயல்பு, அந்த உழைப்பினால் அடையும் பலன்களை மற்றவர்கள் அனுபவித்தல் ஆகியவை அடையப்பெறுவர்.

4. சனிபகவானுடன் புதன் (நட்புக்கிரகம்) இணையப்பெற்றால் ஜாதகருக்கு கலை, கல்வி, ஞானம் அகியவற்றில் மேலான சிறப்பைப்பெறல், அதிக அளவில் உழைப்பினால் பொன், பொருள், ஆபரணங்கள், அசையா சொத்துக்கள் சம்பாதித்தல், சேர்க்கை, வெளிநாடுகளுக்குச் செல்கின்ற எதிர்பாராத வாய்ப்புகளைப் பெறல், அதனால் அதிக அளவில் செல்வச் செழிப்பு, செல்வாக்கு, கௌரவம், பாராட்டுக்கள் ஆகியவை அடையப்பெறுவர்.

5. சனிபகவானுடன் குருபகவான் (சமக்கிரகம்) இணையப்பெற்றால் ஜாதகருக்கு தொழில், வியாபாரம் உத்தியோகத்தில் மிக்க சிறப்புப் பெறல், எதிர்பார்க்கும் லாபம் பெற இயலாமை, எடுக்கும் காரியங்களில் வெற்றிவாய்ப்பு, ஒருசில காரியங்களில் தோல்வியடைதல், உறவினர், நண்பர்களால் உதவிபெறல் அவ்வப்போது கஷ்டங்கள், பலவித நோயினால் அவதிப்படல் ஆகியவை அடையப்பெறுவர்.

6. சனிபகவானுடம் சுக்கிரன் (நட்புக்கிரகம்) இணையப்பெற்றால் ஜாதகருக்கு தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் சிறப்பு, சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு கொள்தல், பொன், பொருள், அசையா சொத்துக்கள் விரயம், கீழ்நிலைப் பெண்களுடன் தொடர்பினால் உல்லாசமாக வாழ்தல் ஆகியவை அடையப்பெறுவர்.

7. சனிபகவானுடன் இராகு (நட்புக்கிரகம்) இணையப்பெற்றால் ஜாதகருக்கு பலவித நோயினால் அவதிப்படல், விபத்தினால் கை, கால்களில் காயங்கள் ஏற்படல் பொன், பொருள், சொத்துக்கள் சம்பாதித்தாலும், அதன் பலன்களை அடைய இயலாத நிலை, தாய்வழி உறவினர்களால் பகை, கெடுதல்கள் வாழ்க்கையில் மனநிம்மதியின்மை ஆகியவை அடைவர்.

8. சனிபகவானுடன் கேது (நட்புக்கிரகம்) இணையப்பெற்றால் ஜாதகருக்கு தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் அதிக அளவில் சிறப்பு, லாபம் அடைதல், பொன், பொருள், ஆபரணங்கள், அசையா சொத்துக்கள் சேர்க்கை, வாகன யோகம், வேறு மொழி பேசுபவரால் அதிக அளவில் நன்மைகள் பெறல், பெண்களால் திடீர் யோகம், குடும்ப வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடைதல் ஆகியவை அடையப்பெறுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் இயக்க பாமக கோரிக்கை

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

மொடக்குறிச்சி அருகே லக்காபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு இன்றுமுதல் தண்ணீா் திறப்பு

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT