செய்திகள்

காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

தினமணி

பூந்தமல்லி அருகே உள்ள மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
பூந்தமல்லியை அடுத்த மாங்காட்டில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் கோயில். இக்கோயிலில் கடைசியாக கடந்த 2001-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், சுமார் ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கோயில் புனரமைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 28-ஆம் தேதி முதல் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், 6 கால யாக பூஜைகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சிவாச்சாரியர்கள் முன்னிலையில், ராஜகோபுரம், மூலவர் விமானங்கள், அர்த்தமேரு ஸ்ரீசக்கரம், உற்சவர் லட்சுமி, சரஸ்வதி பரிவார சந்நிதிகளின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலை 3 மணியளவில் மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு உற்சவர் லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர், வெள்ளி ரிஷப வாகனத்தில் மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT