செய்திகள்

ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

தினமணி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சூரிய பிரபை, சந்திர பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் செவ்வாய்க்கிழமை 63 நாயன்மார்களுடன் ஏகாம்பரநாதர் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து ஏலவார் குழலி அம்மன் திருவீதி உலா, வெள்ளித் தேர் பவனி, திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரினண்த்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் காஞ்சிபுரம், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT