செய்திகள்

ஒதப்பை அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

DIN

ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது .
ஒதப்பை கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி (பூங்காவனத்தம்மன்) உடனுறை ஓங்காட்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை
நடைபெற்றது.
பின்னர், உற்சவர் அங்காளம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு மேளதாளம் முழங்க கோயில் மண்டபத்தில் இருந்து ஊஞ்சல் மண்டபத்துக்கு
அம்மன் கொண்டு வரப்பட்டு, ஊஞ்சலில் வைத்தனர். பின்னர், சிறப்பு தாலாட்டு, பக்தி பாடல் பாடப்பட்டு ஊஞ்சல் உற்சவம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஒதப்பை, ஆட்ரம்பாக்கம், பூண்டி
உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT