செய்திகள்

மணமக்களுக்கு ஏழுமலையான் ஆசீர்வாதம்

திருமணத்துக்கு ஏழுமலையானின் ஆசீர்வாதம் பெற விரும்புவோர் திருப்பதி தேவஸ்தானத்தை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

திருமணத்துக்கு ஏழுமலையானின் ஆசீர்வாதம் பெற விரும்புவோர் திருப்பதி தேவஸ்தானத்தை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வந்து ஏழுமலையானின் காலடியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், அது முடியாதபோது, திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் திருமலைக்கு வந்து சிலர் ஏழுமலையானின் ஆசீர்வாதத்தை பெறுகின்றனர்.
இந்நிலையில் தங்கள் திருமணத்துக்கு ஏழுமலையானின் ஆசீர்வாதம் வேண்டுவோர் தங்கள் திருமண பத்திரிகையை முழு முகவரியுடன் தேவஸ்தானத்துக்கு அனுப்பினால், அவர்கள் மஞ்சள், குங்குமம், கங்கணம், அட்சதை, கல்யாண புத்தகத்துடன் வேத ஆசீர்வாதம் செய்து அதை வீட்டுக்கு நேரடியாக அனுப்பி வைப்பர். இந்த மஞ்சள், குங்குமம், அட்சதை, கங்கணத்தை திருமணத்தின்போது மணமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏழுமலையானின் ஆசீர்வாத பிரசாதத்தை பெற விரும்பும் பக்தர்கள், செயல் அதிகாரி, திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை அலுவலகம், கே.டி.சாலை, திருப்பதி-517501 என்ற முகவரிக்கு, தங்கள் முழு முகவரியுடன் கூடிய திருமண பத்திரிகையை அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0877-2233333, 2277777 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!

சுதந்திர நாளையொட்டி இந்தியக் கடற்படை சார்பில் புதுச்சேரியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

SCROLL FOR NEXT