செய்திகள்

திருப்பதியில் படி உற்சவம்

தினமணி

திருப்பதி மலையடிவாரம் அலிபிரியில் தாசா சாகித்ய திட்டத்தின் கீழ் சனிக்கிழமை அதிகாலை படி உற்சவம் நடைபெற்றது.
திருப்பதியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை தாசா சாகித்ய திட்டத்தின்கீழ் படி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டின் முதல் படி உற்சவம் சனிக்கிழமை காலை திருப்பதியில் நடைபெற்றது. மந்திராலய பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் இதில் கலந்து கொண்டு அலிபிரியில் உள்ள படிகளுக்கு சிறப்பு பூஜை செய்தார். அதன்பின் பஜனை பாடல்களை பாடியவாறு பக்தர்கள் படிகளில் ஏறி திருமலையை அடைந்து ஏழுமலையானை தரிசித்தனர். இதில் தாசா சாகித்ய திட்டத்தின் ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல்

உ.பி.: அகிலேஷ், மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலை!

சந்திரபாபு நாயுடுவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

நவீன், நிதீஷ், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!

சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT