செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தினமணி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் பஞ்ச வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க கோயிலின் விமான தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு காலை 9.30 மணிக்கு முதலில் மூலவர் சுப்பிரமணியர், சண்முகர், வெங்கடாசலபதி சன்னதிகளின் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின் மேலவாசல் விநாயகர், செப்பு, தங்கக் கொடிமரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சுப்பிரமணியர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும், கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவில் குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT