முகப்பு
செய்திகள்

திருமலையில்  உச்சநீதிமன்ற நீதிபதி வழிபாடு

: திருமலையில் உச்சநீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை ஏழுமலையானை வழிபட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
நீதிபதி உதய் உமேஷ் லலித்துக்கு ஏழுமலையான், பத்மாவதி தாயார் படத்தை வழங்கிய தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாச ராஜூ.
பகிர்:

: திருமலையில் உச்சநீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை ஏழுமலையானை வழிபட்டார்.
திருப்பதி ஏழுமலையானை வழிபட உச்சநீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை மாலை திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்று, தங்கும் வசதி மற்றும் தரிசன ஏற்பாடுகளை செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர், வியாழக்கிழமை காலை அர்ச்சனா சேவையில் ஏழுமலையானைத் தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் ஏழுமலையான் பிரசாதம், திருவுருப்படம் உள்ளிட்டவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். 

முழு கட்டுரையைப் படிக்க →