செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயில் ஊஞ்சல் உற்ஸவம் நிறைவு

தினமணி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வந்த ஊஞ்சல் உற்ஸவ விழா தீர்த்தவாரியுடன் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
ஒன்பது நாள்கள் நடைபெறும் ஊஞ்சல் உற்ஸவ விழா நவம்பர் 6 -ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான நெல்லளவு கண்டருளும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 12)நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான தீர்த்தவாரி கண்டருல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்திர புஷ்கரணி குளத்துக்கு எழுந்தருளினார். அங்கு வேதமந்திரங்கள் முழங்க சந்திர புஷ்கரணியில் நம்பெருமாளுக்கு தீர்த்தவாரி கண்டருளப்பட்டது.
பின்னர், அங்கிருந்து காலை 10.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி அலங்காரம் அமுது செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்ததருளி சேவை சாதித்தார். இரவு 8 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT