செய்திகள்

திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவம் தொடக்கம்

DIN

திருமலையில் செவ்வாய்க்கிழமை முதல் பத்மாவதி பரிணயோற்சவம் விமரிசையாகத் தொடங்கியது.
ஏழுமலையான் பத்மாவதித் தாயாரை திருமணம் செய்து கொண்ட திருக்கல்யாண வைபவத்தை பரிணயோற்சவம் என்ற பெயரில் தேவஸ்தானம் திருமலையில் 3 நாள்களுக்கு நடத்தி வருகிறது. கலியுகம் தொடங்கிய நாளில் வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு வந்த பெருமாளுக்கு, திருப்பதியை அடுத்த நாராயணவனம் என்ற பகுதியை ஆட்சிபுரிந்து வந்த ஆகாசராஜா என்ற மன்னர் தன் மகள் பத்மாவதியை திருமணம் செய்து கொடுத்தார். சித்திரை மாத தசமி நாளில் இந்தத் திருமணம் நடைபெற்றதாக ஸ்ரீவெங்கடேஸ்வர மகாத்மியம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
எனவே தேவஸ்தானம் அந்த நாளிலும், அதற்கு முந்தைய, பிந்தைய நாள்களிலும் (மொத்தம் 3 தினங்கள்) திருமலையில் பரிணயோற்சவத்தை நடத்தி வருகிறது. கடந்த 1992ஆம் ஆண்டு முதல் இந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. 
அதன்படி திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவம் செவ்வாய்க்கிழமை விமரிசையாகத் தொடங்கியது. அதற்காக திருமலையில் உள்ள நாராயணயகிரி தோட்டத்தில் தேவஸ்தானம் கல்யாண மண்டபம் ஒன்றை அமைத்துள்ளது. கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து நிபுணர்கள் வந்திருந்து அலங்கார வளைவுகளுடன் அந்த மண்டபத்தை வடிவமைத்துள்ளனர். 
பரிணயோற்சவத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி யானை வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் தங்கப் பல்லக்கிலும் இந்தக் கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர். 
அதன்பின் அவர்களுக்கு வஸ்திரம் சமர்ப்பணம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவற்றை வைகானச ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நடத்தினர். அதன்பின் இரவு மீண்டும் உற்சவ மூர்த்திகள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT