செய்திகள்

ஹிமாச்சலில் பாலம் இடிந்து விழும் அபாயம்: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

தினமணி


ஹிமாச்சலில் உள்ள கின்னார் பகுதியில் உள்ள ரிப்பா பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் யாத்திரை சென்று இதுவரை 2.74 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 237 பேர் அடங்கிய புதிய யாத்ரீகர்கள் குழு இன்று புறப்பட்டு சென்றுள்ளது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கின்னார் பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மலையேறும் பகுதியில் உள்ள ரிப்பா பாலம் வெள்ள நீர் சூழ்ந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

யாத்ரீகர்களின் பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் மற்றும் பல்டால் ஆகிய இரு இடங்களில் யாத்ரீகர்கள் முகாம் அமைத்துத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

வெள்ள அபாயம் குறைந்த பிறகு மீண்டும் குகைக் கோயில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT