செய்திகள்

தூய்மைப்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் பவள வண்ணப் பெருமாள் கோயில் திருக்குளம்

தினமணி

காஞ்சிபுரத்தில் உள்ள பவள வண்ணப் பெருமாள் கோயில் திருக்குளத்தை அண்ணாமலையார் அறப்பணிக்குழுவினர் தலைமையில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் காலாண்டார்  தெருவில் உள்ள திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்ரீ ப்ராளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ப்ரவாளவண்ணப் பெருமாள் ( பவள வண்ணப் பெருமாள்) கோவில் திருக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணியை சென்னையைச் சேர்ந்த  அண்ணாமலையார் அறப்பணிக்குழுவினர் 19.08.2018 ஞாயிற்றுக் கிழமை மேற்கொண்டனர்.

இந்த உழவாரப்பணியினை காஞ்சிபுரம் பெரு நகராட்சி நகர நல அலுவலர்  Dr. P. முத்து துவக்கி வைத்ததோடு, துப்புரவு ஊழியர்கள் சிலரையும் உழவாரப்பணியில் உதவ பணித்திருந்தார். மேலும், குப்பைகளை அகற்ற நகராட்சி லாரியையும் கொடுத்து உதவினார்.

தண்டலத்தில் உள்ள ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரி NSS மாணவ மாணவியர் பலரும், பேராசிரியர் ஆனந்தராஜ் தலைமையில் இப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். 

தண்டலம் கூட் ரோடுக்கு அருகில் உள்ள நயப்பாக்கம் கிராமத்தினர் 15 பேர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த  C L கோவிந்தராஜ் இந்த உழவராப்பணிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்

காலை 9 மணிக்குத் துவங்கிய இப்பணி, மாலை 4 மணிக்கு நிறைவுற்றது.

வி. இராமச்சந்திரன்,
நிர்வாக அறங்காவலர்,
அண்ணாமலையார் அறப்பணிக்குழு
சென்னை
அலைபேசி: 9884080543

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT