செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் டிசம்பர் 14 முதல் எண்ணெய்க் காப்பு உற்ஸவம்

தினமணி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி திருவாதிரையை முன்னிட்டு எண்ணெய்க் காப்பு உற்ஸவம் டிசம்பர் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உற்ஸவ நாட்களில் தினமும் மாலை அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளி அங்கு தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்து பின் சித்திரை வீதிகளை சுற்றி கோயில் சென்றடைவார். 

டிசம்பர் 21-ல் கோ ரதமும், டிசம்பர் 22-ல் கனக தண்டியலில் அம்மன் உற்வலமும், 23-ல் திருவாதிரையன்று பொன்னூஞ்சலில் வலம் வந்து கோயிலை அடைவர். டிசம்பர் 14 முதல் 23 வரை மாணிக்கவாசகர் சுவாமிகள் நூறுகால் மண்டபத்தில் எழுந்தருளி தேவார கோஷ்டியினரால் திருவெண்பா பாடி தீபாரதனை உற்ஸவம் நடைபெறும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT