செய்திகள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தேரோட்டம்

DIN

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. 
இக்கோயிலில் கடந்த 4-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது. 
அதன் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை தாயார் சர்வ சுதந்திர வீரலட்சுமியாக அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் வலம் வந்தார். தேரை கோயில் ஊழியர்கள், பக்தர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்தனர். 
அதன்பின் தாயாருக்கு பால், தயிர், தேன், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், செஞ்சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. 
பின் மாலை 5.30 மணிக்கு 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. இரவு 9 மணிக்கு தாயார் குதிரை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார். இதைக் காண பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர்.
வாகனச் சேவை அருகில் வந்தபோது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வாகனச் சேவைக்கு முன்னால் அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். 

தாயாருக்கு தங்கச் சேலை அணிவிப்பு
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு செவ்வாய்க்கிழமை தங்கச் சேலை அணிவிக்கப்பட்டது. 


பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது வரும் பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு இரு நாள்களுக்கு தங்கச் சேலை அணிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி 12-ஆம் தேதி பஞ்சமி தீர்த்தம் வருவதால், அதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை திருமஞ்சனத்துக்குப் பின் பத்மாவதி தாயார் மூலவர் சிலைக்கு தங்கச் சேலை அணிவிக்கப்பட்டது. தங்கச் சேலையில் தாயாரைக் காண பக்தர்கள் திரண்டனர். பஞ்சமி தீர்த்த நாளன்றும் (புதன்கிழமை) தாயார் தங்கச் சேலையில் தரிசனம் அளிக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது. 
வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைவதற்கு மறு நாளான வியாழக்கிழமை (டிச.13) பத்மாவதி தாயாருக்கு புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. இதில் ரூ.500 கட்டணம் செலுத்தி பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT