செய்திகள்

திருமலையில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்

DIN

திருமலையில் திங்கள்கிழமை முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலையில் அதிகாலை ஏழுமலையானுக்கு முதல் சேவையாக சுப்ரபாத சேவை நடைபெறுவது வழக்கம். அதற்கு பிறகு, தோமாலை, அர்ச்சனா என வரிசையாக ஆர்ஜித சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும். உறக்கத்திலிருக்கும் ஏழுமலையானை சுப்ரபாதம் பாடி துயில் எழுப்புவது திருமலையின் வைகானச ஆகம விதிகளில் ஒன்று. 
ஆனால் மார்கழி மாதம் மட்டும் ஆண்டாள் ஆழ்வாரின் பெருமைகளை போற்றும் வகையில் திருமலையில் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு, அவர் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும். 
அதன்படி கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை திருமலையில் திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டது. மார்கழி மாதம் முடிந்ததையடுத்து வழக்கம் போல் திங்கள்கிழமை முதல் சுப்ரபாத சேவை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT