முகப்பு
செய்திகள்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.62 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.62 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On : 10 ஜூலை, 2018 at 4:14 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.62 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின் தங்களால் இயன்ற காணிக்கைகளை உண்டியல் மூலம் செலுத்தி வருகின்றனர். அதன்படி சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ.2.62 கோடி வசூலானது. 
ரூ.1.51 லட்சம் நன்கொடை: ஏழுமலையானின் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து வருகின்றனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையானின் கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.51 ஆயிரம் என மொத்தம் ரூ.1.51 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.