செய்திகள்

ஆலங்குடி குருபகவான் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

தினமணி

ஆலங்குடி குருபகவான் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும், நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் மாசிமகா குருவார தரிசன விழா மார்ச் 1-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாசி மாதம் 4-ஆவது வியாழக்கிழமையையொட்டி, குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு ஹோமம், மதியம் 1 மணிக்கு அபிஷேகம், 1.30 மணிக்கு பூர்ணாஹூதி, 2 மணிக்கு குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம், மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. ஹோமத்தில் புனிதநீர் நிரப்பட்ட சங்குகள் சிவலிங்கவடிவில் அமைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT