செய்திகள்

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவையொட்டி நாளை தேரோட்டம்

தினமணி


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. 

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். 

இதையொட்டி, எட்டாம் நாள் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்தார். இதைத்தொடர்ந்து பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயிலை அடைந்தார். 

திருவிழாவின் சிகர விழாவான தேரோட்டம் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கி பிள்ளையார் ரதம், சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர் திருவீதி வலம் வந்து நிலையை அடையும். தேரோட்டத்தையொட்டி பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT