செய்திகள்

பழனியில் கொங்குசேர மன்னர்கள் பயன்படுத்திய நாணயம் கண்டுபிடிப்பு

தினமணி

பழனியில் 14-ம் நூற்றாண்டில் பயன்படுத்திய நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி பழங்கால நாணயங்கள் சேகரிப்பாளர், அப்பகுதியில் இருந்த சுகுமார்போஸ் என்பவர் வைத்திருந்த செம்பு நாணயம் ஒன்றை ஆய்வு செய்தார். 

கேரளம் மற்றும் தமிழகத்தை ஆண்ட கொங்குசேர மன்னர்கள் ஆட்சி செய்த 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்கள் எனத் தெரிய வந்தது. அந்த செம்பு நாணயம் 3,200 கிராம் எடையுள்ளது. 

பழனி சண்முகநதி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாணயம் செம்பினால் ஆனது. ஒழுங்கற்ற வட்டவடிவத்தில் முன்புறம் இடத்துக்கோடியில் வில்லும், அடுத்து மான், யானை, பனைமரம் உள்ளன. இவை பண்டைய கொங்குசேர அரசின் முத்திரைகள். இந்த மாதிரியான நாணயத்தைக் காண்பது மிகவும் அரிதாகும் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT