செய்திகள்

கடக ராசிக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சி அனுகூலமாக இருக்குமா? 

2018-ம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் கடக ராசிக்கு..

தினமணி

2018-ம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் கடக ராசிக்கு துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

கடகம் (புனர்ப்பூசம் 4-ம் பாதம் பூசம், ஆயில்யம்)

ராசிக்கு 5-ல் இருக்கும் குரு 9-ம் இடத்தையும், 11-ம் இடத்தையும், ஜென்ம ராசியையும் பார்க்கிறார். குரு பார்க்கக் கோடிப் புண்ணியமன்றோ! ஜென்மராசியைப் பார்ப்பதால் உங்களுக்குத் தெய்வ அனுக்கிரகம் இருக்கிறது. ஆகவே பல காரியங்கள் உங்களுக்கு அனுகூலமாகவே நடந்துவரும். 

உங்கள் உடல் நிலை நல்லவிதமாகவே இருந்து வரும். ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியானது உடல் முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதிக பாதிப்பிலிருந்து காப்பாற்றும். 9-ம் இடமான தன் சொந்த வீட்டையே பார்ப்பதால் தகப்பனாருடனான உறவு மேம்படும். சிலருக்குத் தகப்பனாரிடமிருந்து உதவிகள் கிட்டும். சிலருக்கு ரேஸ் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். வயதானவர்களுக்கு தங்கள் பெண், பிள்ளைகளிடமிருந்து உடல் உதவியோ அல்லது பண உதவியோ கிடைக்கும்.  

குடும்ப வாழ்க்கையைப் பொருத்தமட்டில் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் சுமுகமாக இருக்காது. அடிக்கடி சிறு, சிறு மனஸ்தாபங்கள் ஊடல்களுக்கு இடமுண்டு. மற்ற மாதங்களில் குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருக்கும். பொருளாதாரம் பொதுவாக நன்றாக இருந்தாலும் பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் மிகச் சரளமான பொருளாதார நிலை இருக்கும்.  

ஸ்திர சொத்துக்கள், வாகனம் வாங்க விழைவோருக்கு இந்த ஆண்டு மிக அனுகூலமாக இருக்கிறது. சிலருக்கு இருக்கும் பழைய வீட்டை விற்க வேண்டுமென்று முயற்சி செய்வார்கள். அவர்களுக்கு அதற்கு அனுகூலமான நேரம் வராமல் இருக்கும். இந்த ஆண்டு பங்குனி, சித்திரை மாதங்கள் அதற்கு அனுகூலமாக இருக்கின்றன.  

திருமணத் தேடல்களில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் சற்றுப் பின்னடைவாகவே காணப்படுகிறது. 7-ம் வீட்டிற்குடைய சனி 6-ம் வீட்டில் இருப்பதால் பல தடங்கல்களுக்குப் பிறகு திருமணம் நிச்சயமாகும். 

வியாபாரத்திலிருப்போருக்கு: வியாபாரம் நல்லபடியாகவே இருக்கும். இவர்களுடன் போட்டியிடும் மற்றவர்களைவிட இவர்கள் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். 

உத்தியோகத்திலிருப்போருக்கு: 6-ம் வீட்டில் சனி இருப்பதால் உத்தியோகத்தில் வேலைப்பளு சற்று அதிகம் இருக்கும். உங்கள் திறமைகளுக்கு மேலதிகாரிகள் அவ்வளவாக மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். உத்தியோக உயர்வு எதிர்பார்ப்பவர்களுக்கும் அவர்கள் ஆசை நிறைவேற சற்றுத் தாமதம் ஆகும். வேலை தேடும் படலத்தில் இருப்போருக்கும் இதே நிலைதான். 

மாணவர்களுக்கு: இது ஒரு அனுகூலமான காலமாகவே தெரிகிறது. மேல்படிப்படிப்புத் தொடர இருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவே கிடைக்கும்.  

*****

சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களைப் படிக்க நாளை வரை காத்திருங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT