செய்திகள்

உயர் பதவி கிடைக்கனுமா? இதை மட்டும் செய்யுங்க!

தினமணி

பாரத தேசத்தில் எங்கெல்லாம் ஸ்ரீ ராமனின் பாதங்கள் பட்டனவோ, அங்கெல்லாம் நமது பாதங்களை வைத்தாலே போதும்! நம்மோடு ஒட்டி வந்த பாவங்கள் பதறியடித்துக்கொண்டு பறந்து போய்விடும். ராமபிரான் மீது பக்தி கொண்டு சிரத்தையுடன் அவன் பாதங்களில் சரணாகதி செய்தாலே போதும். சர்வ வல்லமை பெற்ற அந்தப் பாதங்கள் நமக்கு சகல நன்மைகளையும் அள்ளிக் கொடுத்துவிடும்.

விபீஷணனுக்கு ஸ்ரீ ராமனை நன்றாகவே தெரிந்திருக்கிறது! அதனாலேயே ராமனிடம் சரணாகதி அடைந்தான். அதன் பயனாக, இலங்கைக்கு அதிபதியானான். ராமபிரானின் பாதங்களுக்கு அவ்வளவு வலிமை உண்டு. ராமநாமத்திற்கோ இதை விட அதிக வலிமை உண்டு.

முன்பொரு சமயம், பரமேஸ்வரன் தன்னைச் சுற்றியுள்ள கணங்களுக்கு யாரை அதிபதியாகவும் தலைமை நாயகனாகவும் நியமிப்பது என்று யோசித்தார். 

குமரனையும் விநாயகரையும் அழைத்தார். தன்னுடைய அந்த எண்ணத்தை எடுத்துரைத்து "இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறீர்களோ அவர்களை கணங்களுக்கு அதிபதி ஆக்குகிறேன்'' என்றார். இதேபோன்று முன்பு ஒரு மாம்பழத்தை கொடுப்பதற்கு முருகனையும் விநாயகரையும் சோதித்த சோதனை வேதனையாகி குன்று தோறும் குமரன் என்ற கதையாகிவிட்டது. அப்போது ஏமாந்து போனதைப்போல இப்போது ஏமாற விரும்பாத முருகன், "தாய்- தந்தையரே உலகம்' என்று சுற்றி வந்தார்.

ஆனால் அதிபுத்திசாலியான விநாயகரோ, ராமநாமத்திற்குள் இந்தப் பிரபஞ்சமே அடங்கி இருக்கிறது என்ற ரகசியத்தை அறிந்து வைத்திருந்ததால் பூமியில் "ராமா' என்று எழுதி அதைச் சுற்றி வந்து பரமேஸ்வரனின் முன் நின்றார். பரமேஸ்வரன் விநாயகரைப் பாராட்டி அந்தப் பதவியை அளித்தார். கணங்களுக்கு அதிபதி என்பதால்தான் அவரை "கணபதி' என்று அழைக்கிறோம்.

"ராமா' என்ற நாமத்தினால்தான் கணங்களுக்கு அதிபதியானான் கணேசன். ஆக, ராமநாமத்திற்கு இப்படிப்பட்ட வலிமையுண்டு. ஸ்ரீ ராமனின் பாதமும் சரி; நாமமும் சரி; நம்மை நல்ல பதவிக்கு அழைத்துச் செல்லக் கூடியவை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT