செய்திகள்

கணவன் மனைவி இணக்கத்துடன் வாழ தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க! 

இல்லறமே நல்லறமாகும் என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளனர். திருமணம் எனும் உயர்வான பந்தத்தில்..

தினமணி

இல்லறமே நல்லறமாகும் என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளனர். திருமணம் எனும் உயர்வான பந்தத்தில் ஆணும், பெண்ணும் ஒன்றிணைந்து, உள்ளன்போடு வாழ்ந்தாலே திருமணம் வெற்றியடையும். 

ஆனால், இன்றைய இளைஞர் வட்டாரம் எவ்வளவு வேகமாக திருமணம் செய்கின்றார்களோ, அவ்வளவு வேகமாக மனமுறிவு பெற முயல்கின்றார்கள். இப்படிப்பட்ட தம்பதிகள், கணவன் மனைவி ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரின் இந்த ஸ்லோகத்தை அனுதினமும் படித்துவர பிரச்னைகள் தீரும். 

அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்

சாம்பேய கௌரார்த சரீரகாயை 
கர்பூர கௌரார்த சரீரகாய 
தம்மில்லகாயை ச ஜ்டாதராய 
நம:சிவாயை ச நம:சிவாய 

கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை 
சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய 
க்ருதஸ்மராயை விக்ருதய்மராய 
நம:சிவாயை ச நம:சிவாய 

ஜணத் க்வணத் கங்கண நூபுராயை 
பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய 
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய 
நம:சிவாயை ச நம:சிவாய 

விசால நீலோத்பல லோசனாயை 
விகாஸி பங்கேருஹ லோசனாய 
ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய 
நம:சிவாயை ச நம:சிவாய 

மந்தார மாலா கலிதாலகாயை 
கபால மாலாங்கித கந்தராய 
திவ்யாம்பராயை ச திகம்பராய 
நம:சிவாயை ச நம:சிவாய 

அம்போதர ச்யாமல குந்தலாயை 
தடித் ப்ரபா தாம்ரஜடாதராய 
நிரீச்வராயை நிகலேச்வராய 
நம:சிவாயை ச நம:சிவாய 

ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய 
காயை ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய 
ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே 
நம:சிவாயை ச நம:சிவாய 

ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை 
ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய 
சிவான்விதாயை ச சிவான்விதாய 
நம:சிவாயை ச நம:சிவாய 

ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் 
யோ பக்த்யா ஸ மான்யோ 
புவி தீர்கஜீவீப்ராப்னோதி 
ஸெளபாக்ய மனந்தகாலம்

சிவன் - பார்வதி ஆகிய இரு தெய்வங்களையும் ஒன்றாக இணைத்துப் போற்றும் ஸ்லோகம் இது. இதை கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் தினமும் பாராயணம் செய்யலாம். செவ்வாய், வெள்ளியில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம். இதனால், சண்டை சச்சரவுகள் நீங்கி ஒருவருக்கொருவர் இணக்கம் ஏற்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT