முகப்பு
செய்திகள்

நாகேந்திரனுக்கு நாகாபரணம்

நாகாபரணம் (நாகம்+ஆபரணம்) என்பது இந்து சமயக் கோயில்களில் இறைவனுக்கு அலங்காரம் செய்ய பயன்படும் ஆபரணங்களில் ஒன்றாகும்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:17 AM
பகிர்:

நாகாபரணம் (நாகம்+ஆபரணம்) என்பது இந்து சமயக் கோயில்களில் இறைவனுக்கு அலங்காரம் செய்ய பயன்படும் ஆபரணங்களில் ஒன்றாகும்.

சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகளில் மற்றும் திருவிழா காலங்களிில், மூலவரான லிங்கத்திருமேணியைச் சுற்றி ஐந்து தலை நாகம் படம் எடுப்பதைப் போன்ற தோற்றத்தில், நாகாபரணம் அணிவிக்கப்படுகிறது.

செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் நாகாபரணம் செய்யப்படுகிறது.

சர்ப்ப தோஷம் நிவர்த்தி பெற அபிஷேக, அலங்கார, ஆராதனைகளுடன் நாகாபரணம் சார்த்தி வழிபட்டால், பலன் பெறுவது திண்ணம் என்று சிவபூஜா பலன்களாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தின் பின்புறம், மார்கெட் அருகில் பூங்காவில் இருக்கும் மாரியம்மன் கோயிலில், சன்னிதி கொண்டிருக்கும் உமா மகேசுவர லிங்கத்திருமேணிக்கு புதியதாக செய்யப்பட்ட நாகாபரணம் அணிவிக்கப்பட உள்ளது.

இன்று (0303.2019) மாலை நடைபெற உள்ள பிரதோஷ வழிபாட்டிலும், நாளை (04.03.2019) உத்தமமோத்த சோமவார சிவராத்திரி நன்னாளிலும் நாகாபரணத்துடன் பக்தர்கள் ஈஸ்வரனை தரிசிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.