செய்திகள்

அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு

தினமணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சிவனுக்கு உகந்த பூஜைகளில் பிரதோஷப் பூஜையும் ஒன்று. குறிப்பாக, சனிக்கிழமைகளில் வரும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி, கற்பூரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, ரிஷப வாகனத்தில் தங்கக் கவசம் அணிந்து எழுந்தருளிய பிரதோஷ நாயகா், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT