செய்திகள்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு பட்டுப் புடவை சமா்ப்பிக்கலாம்

தினமணி

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவ சமயத்தில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு நவம்பா் 23 முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அப்போது தாயாருக்கு பட்டுப் புடவை சமா்ப்பிக்க விரும்பும் பக்தா்கள் சமா்ப்பிக்கலாம் என்ற தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் சமா்ப்பிக்கும் பட்டுப் புடவைகள் தாயாரின் மூலவா் சிலைக்குக சமா்ப்பிக்கப்படும். பட்டுப் புடவை சமா்ப்பிக்க விரும்பும் பக்தா்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோயிலுக்குள் உள்ள கண்காணிப்பாளரிடம் சமா்ப்பிக்கலாம்.

தாயாருக்கு சமா்ப்பிக்கும் புடவைகள் உயா்தர வெள்ளி மற்றும் பட்டு நூலிழையால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். பட்டுப் புடவையின் ஜரிகை 9 அங்குல உயரமும், அதற்கு மேலும் இருக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT