செய்திகள்

ஐப்பசி பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!

தினமணி

சபரிமலை ஐயப்பன் கோயில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாத பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனாரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நாளை மாலை 5.00 மணிக்கு நடை திறக்கிறார். 

வழக்கம் போல் அன்றிரவு 10.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் அக்.18-ம் தேதியன்று அதிகாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் நடைபெறும். 

அன்று மாலை 6.00 மணிக்கு தீபாராதனை புஷ்பாபிஷேகம், படி பூஜையும் நடைபெறும். சிறப்புப் பூஜைகளுக்கு பின் 22-ம் தேதி இரவு 10.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT