செய்திகள்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.80.24 லட்சம்

DIN


திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 80.24 லட்சம் காணிக்கையாகச் செலுத்தினர். 
திருத்தணி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 5-ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 40 நாள்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்தனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களாக உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினர்.
புதன்கிழமை கோயில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் ஊழியர்களால் எண்ணப்பட்டது. 
இதில், ரூ.80 லட்சத்து 24 ஆயிரத்து 514 ரொக்கம், 450 கிராம் தங்கம், 17,500 கிராம் வெள்ளி ஆகியவை இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT