செய்திகள்

ஆண்டிக் கோலத்தில் உள்ள முருகனை வணங்கலாமா? கூடாதா?

DIN

முருகன் தனது பலவிதமான கோலங்களில் அழகாகக் காட்சி தந்தாலும் அவரது ஆண்டிக்கோலத்தை (தண்டபாணி) வணங்கிட பெரும்பாலான பக்தர்கள் யாரும் விரும்புவதில்லை.

இக்கோலத்தில் உள்ள முருகனை வணங்கினால் அவரைப்போல நாமும், பொருள், செல்வங்களை இழப்போம் என நம்பிக்கை கொண்டுள்ளனர். இது மிக தவறான புரிதல் ஆகும்.

பழநியில் கூட முருகனை ராஜ அலங்கார கோலத்தில் காட்டுகின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரரை வணங்கி விட்டு வெளியே வந்ததும் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டி முருகனை பார்க்காமலேயே சிலர் சென்று விடுவர். இது தவறான செயல்...

தண்டபாணியின் இக்கோலம் மாயையான உலகில் இருக்கும் நாம் நமது ஆணவம், கர்வம் போன்றவற்றைத் துறந்து போலியில் பற்றின்றி வாழவேண்டும் என்பதையே
உணர்த்துகிறது.

மேலும், எத்தனை வேண்டுதல்களைச் செய்து எவ்வளவு செல்வங்களைப் பெற்றாலும், பிணமாய் எரியும் போது எப்படி நிர்வாணமாய் வந்தோமோ அப்படி நிர்வாணமாகவே இறைவனை அடைவோம் என்பதையே ஆண்டிக்கோலம் காட்டுகிறது.

"வேலுண்டு வினையில்லை;
மயிலுண்டு பயமில்லை;
குகனுண்டு குறைவில்லை"...

கந்தனுக்கு அரோகரா !
கடம்பனுக்கு அரோகரா !!
வேலனுக்கு அரோகரா !!!
முருகனுக்கு அரோகரா !!!!
பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா...!

- தொகுப்பு - கோவை ச.பாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT