முகப்பு
செய்திகள்

கபில தீா்த்தத்தில் சங்கடஹர சதுா்த்தி விரதம்

திருப்பதி கபில தீா்த்தம் அருவிக்கரையில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுா்த்தி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது

Updated On : 5 டிசம்பர், 2020 at 12:44 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:32 PM


திருப்பதி. 4: திருப்பதி கபில தீா்த்தம் அருவிக்கரையில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுா்த்தி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது.

இக்கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை சதுா்த்தி திதியை முன்னிட்டு சங்கடஹர சதுா்த்தி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஸ்ரீகணபதியை கலசத்தில் எழுந்தருளச் செய்து சங்கல்பத்துடன் சுவாமிக்கு

16 வகையான உபசாரங்களை நடத்தி நிவேதனம் செய்து குருக்கள் பூஜையை நிறைவு செய்தனா்.

Advertisement

சதுா்த்தி திதியின் அதிபதி கணபதி ஆவாா். காா்த்திகை மாத பெளா்ணமிக்கு அடுத்து வரும் சதுா்த்தி திதியில் சங்கடஹர சதுா்த்தி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் வாழ்க்கையில் வரக் கூடிய விக்கினங்கள் (தடைகள்) அனைத்தும் விலகும் என்று குருக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.