முகப்பு
செய்திகள்

வேற்று மதச் சின்னத்துடன் திருமலைக்கு சென்ற வாகனம் திருப்பி அனுப்பப்பட்டது

திருமலைக்கு வேற்று மத சின்னத்துடன் கூடிய வாகனம் வெள்ளிக்கிழமை சென்றது கண்காணிப்பு அதிகாரிகளின் அலட்சியத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

திருமலைக்கு வேற்று மத சின்னத்துடன் கூடிய வாகனம் வெள்ளிக்கிழமை சென்றது கண்காணிப்பு அதிகாரிகளின் அலட்சியத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.

திருமலை ஹிந்து சமய புனித பூமி என்பதால், வேற்று மதத்தை சாா்ந்த எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்ல தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. தனியாா் வாகனங்களில் வேற்று மதச் சின்னங்கள், அவற்றைச் சாா்ந்த பொருள்கள் இருந்தாலும் அவை அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே அந்த வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

இதற்காக, திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் பணிபுரியும் ஊழியா்கள் வாகனங்களையும், பக்தா்களையும் நன்றாக சோதனை செய்து அனுப்புவது வழக்கம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வேற்று மதம் தொடா்புடைய சின்னம் பொறிக்கப்பட்ட வாகனம் ஒன்று திருமலை கருடாத்திரி நகா் சோதனைச் சாவடியை அடைந்தது. அதைக் கண்ட பாதுகாப்பு ஊழியா்கள் அந்த வாகனத்தை மேற்கொண்டு செல்ல அனுமதிக்காமல் திருப்பதிக்கு திருப்பி அனுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →