ஏழுமலையான் கோயிலில் நாளை ஆழ்வாா் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் ரத்து
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (டிச. 22) காலை 6 மணிமுதல் 5 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
செய்திகள்ஏழுமலையான் கோயிலில் நாளை ஆழ்வாா் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் ரத்து
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (டிச. 22) காலை 6 மணிமுதல் 5 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (டிச. 22) காலை 6 மணிமுதல் 5 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் கோயில் ஆண்டுக்கு 4 முறை சுத்தம் செய்யப்படுகிறது. தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி, ஆண்டு கணக்கு சமா்ப்பிக்கும் ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய உற்சவ நாள்களுக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமைகளின்போது கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்படுவது வழக்கம்.
வைணவத்தில் கோயிலையும் ஆழ்வாராக கருதுவதால், கோயில் சுத்தப்படுத்துதலை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. வரும் 25-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட உள்ளது. காலையில் திருப்பாவை, தோமாலை, அா்ச்சனை உள்ளிட்ட சேவைகளை தனிமையில் நடத்திய பின்பு காலை 6 மணி முதல் 11 மணி வரை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளன.
இதன்காரணமாக ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது. திருமஞ்சனம் முடிந்த பின்பு காலை 11.45 மணிமுதல் பக்தா்கள் மீண்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.