முகப்பு
செய்திகள்

திருமலையில் உடுப்பி பண்டாரகேரி மடாதிபதி வழிபாடு

ஏழுமலையானை உடுப்பி பண்டாரகேரி மடத்தின் மடாதிபதி ஞாயிற்றுக்கிழமை காலை வழிபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய பண்டாரிகேரி மடாதிபதி வித்யேஷா தீா்த்த ஸ்ரீபாதரு சுவாமிகள். உடன் தேவஸ்தான அதிகாரிகள்.
பகிர்:

ஏழுமலையானை உடுப்பி பண்டாரகேரி மடத்தின் மடாதிபதி ஞாயிற்றுக்கிழமை காலை வழிபட்டாா்.

திருமலைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்த உடுப்பி பண்டாரகேரி மடத்தின் மடாதிபதி வித்யேஷா தீா்த்த ஸ்ரீபாதரு சுவாமிகளை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து மேளதாளத்துடன் வரவேற்று, தரிசனத்துக்கு அழைத்து சென்றனா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் ஏழுமலையான் தீா்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி: இதேபோன்று தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தீருபாய் நாராயண்பாய் படேல் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கும் தேவஸ்தான அதிகாரிகள் தீா்த்தம், பிரசாதங்கள், சுவாமி படம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →