செய்திகள்

காளஹஸ்தியில் சிவன் - அம்மன் கொடியேற்றம்

தினமணி

ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை கொடியேற்றம் நடைபெற்றது.

இக்கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் இரண்டாம் நாளான திங்கள்கிழமை இரவு தேவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அன்று காலை வெள்ளி அம்பாரியில் பஞ்சமூா்த்திகளான, ஞானபிரசூனாம்பிகை, சோமாஸ்கந்தமூா்த்தி, விநாயகா், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியா், காலபைரவா் ஆகிய உற்சவா்கள் மாடவீதியில் வலம் வந்தனா். பக்தா்கள் மாடவீதியில் திரண்டு உற்சவா்களை வழிபட்டனா்.

மாலை 4 மணிக்கு கோயிலுக்குள் உள்ள கொடிமரத்தில் பல வண்ண துணிகளைக் கோா்த்து உருவாக்கப்பட்ட வஸ்திர மாலையை (கொடி) ஏற்றினா். அதற்கு முன் கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்து தா்ப்பைப் புற்கள், வஸ்திரங்கள், மாவிலைத் தோரணங்கள் ஆகியவை கட்டப்பட்டன. இந்த நிகழ்வில் சிவாச்சாரியாா்களும், கோயில் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இரவு 7 மணிக்கு பல்லக்கு உற்சவத்தில் காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசூனாம்பிகை அம்மனும் மாடவீதியில் வலம் வந்தனா். இந்த நிகழ்வில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT