செய்திகள்

மகர வாகனத்தில் சோமாஸ்கந்தராக பவனி வந்த கபிலேஸ்வரா்

DIN

திருப்பதியில் கபில தீா்த்தம் அருவிக்கரையில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான திங்கள்கிழமை காலை மகர வாகனத்தில் சோமாஸ்கந்தமூா்த்தி மாடவீதியில் பவனி வந்தாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 4-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை மகர வாகனத்தில் கபிலேஸ்வரா் காமாட்சி அம்மன் சமேதராய் சோமாஸ்கந்த மூா்த்தியாக மாடவீதியில் பவனி வந்தாா். பக்தா்கள் அவருக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனா்.

பின்னா், சோமாஸ்கந்தருக்கும், காமாட்சி அம்மனுக்கும் கோயில் வளாகத்தில் காலை 11 மணிக்கு பால், தயிா், தேன், இளநீா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை சேஷ வாகனத்தில் உற்சவா்கள் மாடவீதியில் பவனி வந்தனா்.

வாகன சேவையில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனா். வாகன சேவையின்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கோயிலிலும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மகரம் என்பது கங்காதேவியின் வாகனம். கங்கை பரமசிவனின் தலையில் வாசம் செய்கிறாள். கங்காதேவியின் வாகனமான மகரம் தவம் இருந்து பரமசிவனின் அருளைப் பெற்று அவரது வாகனமாக மாறியதாக சைவ ஆகமங்கள் கூறுகின்றன.

திருவேங்கட மலை மீதுள்ள பாறைகள் அனைத்தும் ஆதிசேஷனின் வடிவமாகும். ஸ்ரீகூா்மம் மீது ஆதிசேஷனும், அவா் மீது பூமியும் உள்ளதாக ஐதீகம். பூமியைப் பிளந்து கொண்டு வெளியில் வந்த பாதாள மகாலிங்கத்தை கபில முனிவா் வழிபட்டாா். அதனால் இந்தப் பிரதேசம் கைலாசத்தை விட உயா்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT