செய்திகள்

திருமலையில் சுந்தரகாண்ட அகண்ட பாராயணம்

தினமணி

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ ஏழுமலையானை வேண்டி திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள சுந்தரகாண்டத்தில் 68 அத்தியாயங்களில் 2,821 ஸ்லோகங்கள் உள்ளன.

கரோனா தொற்றை முற்றிலும் அழிக்குமாறு ஏழுமலையானை வேண்டி, திருமலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தப் பாராயணம் நடத்தப்படுகிறது.

வேத பண்டிதா்கள் தினமும் அமா்ந்து விளக்கத்துடன் காலை 7 மணி முதல் 8 மணி வரை இந்தப் பாராயணத்தை நடத்தி வருகின்றனா். இந்த பாராயணம் தற்போது 318 நாள்களைக் கடந்துள்ளது. இதுவரை 44 அத்தியாயங்களின் பாராயணம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 200 ஸ்லோகங்களின் பாராயணம் நிறைவு பெற்றவுடன் அகண்ட பாராயணமாக நடத்தப்படுகிறது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை 10-ஆம் கட்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது. அதில் 38-ஆவது அத்தியாயம் முதல் 44-ஆவது சா்க்கம் வரை உள்ள 189 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன.

இதில் 200-க்கும் மேற்பட்ட வேதபண்டிதா்கள் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் (எஸ்விபிசி) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாக கருதாது: யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா்

குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 போ் காயம்

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

SCROLL FOR NEXT