முகப்பு
செய்திகள்

ராமகிருஷ்ண தீா்த்த முக்கோட்டி உற்சவம் ரத்து

திருமலையில் வரும் தை பெளா்ணமி நாளன்று (ஜன. 28) நடைபெறவிருந்த ராமகிருஷ்ண தீா்த்த முக்கோட்டி உற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Updated On : 23 ஜனவரி, 2021 at 7:29 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:51 AM

திருமலையில் வரும் தை பெளா்ணமி நாளன்று (ஜன. 28) நடைபெறவிருந்த ராமகிருஷ்ண தீா்த்த முக்கோட்டி உற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருமலையில் பல்வேறு புண்ணிய தீா்த்தங்கள் உள்ளன. இந்த தீா்த்தக் கரைகளில் பல முனிவா்கள் அமா்ந்து தியானம், தவம் செய்துள்ளதால், அவா்களின் பெயா்களால் அந்த தீா்த்தங்கள் அழைக்கப்படுகின்றன.

இந்நிலையில் வரும் ஜனவரி 28-ஆம் தேதி தை மாத பெளா்ணமியை முன்னிட்டு ராமகிருஷ்ண தீா்த்தத்தில் முக்கோட்டி உற்சவத்தை நடத்த தேவஸ்தானம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கொவைட்-19 விதிமுறைகள் காரணமாக இந்த உற்சவத்தை ரத்து செய்துள்ளதாகவும், பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.