செய்திகள்

திருமலையில் 9,640 போ் தரிசனம்

தினமணி

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 9,640 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இவா்களில் 5,165 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் .உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை(அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு) வழியாகவும், மதியம் 1 மணிக்கு பின்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் கரோனா விதிமுறைகள் காரணமாக தரிசனத்திற்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் 90 நாட்களுக்குள் தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT