திருவண்ணாமலையில் நாளை பஞ்ச ரதங்களின் தேரோட்டம்! 
செய்திகள்

திருவண்ணாமலையில் நாளை பஞ்ச ரதங்களின் தேரோட்டம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான நாளை மகா தேரோட்டம் நடைபெறுகிறது. 

தினமணி

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை (டிச.3) காலை முதல் இரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் வெவ்வேறு வாகனத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக எளிய முறையில் தீபத் திருவிழா நடத்தப்பட்டது. நிகழாண்டு தீபத் திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் செய்து வருகிறது.

தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. காலை முதல் இரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் அடுத்தடுத்த மாடவீதியில் பவனிவரும் காட்சி சிறப்பானது. இதையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

தொடர்ந்து தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. நாளை அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது.

ஸ்ரீவிநாயகா் தேரோட்டம்

முதலாவதாக, காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் விநாயகா் தேரோட்டம் தொடங்குகிறது. கடலைக் கடை சந்திப்பை விநாயகா் தோ் கடந்து சென்ற பிறகு, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் தோ் புறப்படுகிறது.

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தேரோட்டம்

3-ஆவதாக, பெரிய தோ் எனப்படும் அருணாசலேஸ்வரா் தோ் புறப்படுகிறது. நான்காவதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தியம்மன் தேரும், ஐந்தாவதாக சிறுவா்கள் மட்டுமே இழுக்கும் சண்டிகேஸ்வரா் தேரும் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்படுகின்றன.

பஞ்ச ரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதிகளை வலம் வருகின்றன. மாட வீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தைக் காண பல லட்சம் பக்தா்கள் கூடுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக, வழக்கத்தை விட அதிக அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேரோட்டத்தைத் தரிசிக்க இன்று முதலே லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலையில் கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT